புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் - மாவட்ட ஆட்சியர்


புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் - மாவட்ட ஆட்சியர்
x
தினத்தந்தி 9 July 2023 2:22 PM IST (Updated: 9 July 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

வேலூர்

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரியாணி கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இங்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்தனர். இதனால் பொதுமக்கள் பலர் கடையில் குவிந்தனர்.

இதனால் காட்பாடி - வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதி வழியாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வந்தார். மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்துள்ளார். இதனால் கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story