சீமான் உருவபொம்மை எரிப்பு; 8 பேர் மீது வழக்கு
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் உருவபொம்மை எரித்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்
இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நேற்று விடுதலைக்களம் கட்சியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது காரில் வந்த 2 பேர் சீமானின் உருவபொம்மையை எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே உருவபொம்மை எரிப்பு தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story