திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்


திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தெரிவித்தார்.

திருவள்ளூர்

வாகனங்கள் ஏலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 46 மோட்டார் சைக்கிள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 34 நான்கு சக்கர வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் வருகிற 27- ந்தேதி அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன்வைப்பு கட்டணத் தொகையாக மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வழங்கப்படும்.

விற்பனை வரி

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு விற்பனைவரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு விற்பனை வரி 18 சதவீதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும். மேலும் விவரங்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.


Next Story