தகுதிச்சான்று இல்லாத 2 லாரிகள் பறிமுதல்


தகுதிச்சான்று இல்லாத 2 லாரிகள் பறிமுதல்
x

தகுதிச்சான்று இல்லாத 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களில் ஆய்வு நடத்தும்படி திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகேயும் மற்றும் கரூர் சாலையில் சோமரசம்பேட்டை அருகேயும் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார், வேன், ஆட்டோ, பஸ், லாரி உள்ளிட்ட 86 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் வரி செலுத்தாமலும், தகுதிச்சான்று இல்லாமலும் சரக்கு ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 2 ஆம்னி பஸ்கள், 7 தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஆகியவற்றில் அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.5 ஆயிரம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இது தவிர, 6 பஸ்களில் போக்குவரத்து விதியை மீறி பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story