சென்னையில் 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.14லட்சம் அபராதம்


சென்னையில் 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.14லட்சம் அபராதம்
x

சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடையை மீறி சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.14.16 லட்சம் அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.


Next Story