750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது


750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  3 பேர் கைது
x

750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர்களை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர்களை கைது செய்தனர்.

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று பேச்சிப்பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கல்குளம் மணியன்குழியை சேர்ந்த செய்யது அலி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல எஸ்.டி.மங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியதாக ஆறுதேசம் பகுதியை சேர்ந்த சாபுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள், 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இறச்சகுளம் பகுதியில் மொபட்டில் 130 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக செருப்பாலூரை சேர்ந்த ஜெகன் (44) என்பவரையும் போலீசார் கைது செய்து, மொபட்டுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.


Next Story