வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ்(வயது 35) என்பவர் தனது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான 6,660 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சத்யராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story