வேனில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது


வேனில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
x

வேனில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

குன்னம்:

புகையிலை பொருட்கள்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்திரன்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பணியில் மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் இரவு குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் போலீசார் கோவில்பாளையம் கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.

அந்த வேனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டையில் கட்டப்பட்டு இருந்தன. மேலும் அந்த போதை பொருட்களை கடத்தி வந்தது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவரிடம் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ எடை கொண்ட 15 பண்டல் புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அலெக்சாண்டரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story