சவடுமண் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்
திருவாடானை அருகே சவடுமண் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் அங்குள்ள சோதனை சாவடி முன்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சவடுமண் ஏற்றி சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டு ஆவணங்களை சரிபார்த்தனர்.. ஆனால் அவர்கள் அரசு அனுமதித்த நேரத்திற்கு மேல் சவடுமண் ஏற்றி சென்றதை தொடர்ந்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அடுத்தகுடி ராஜா (வயது 24), ஆக்களூர் சஞ்சய் காந்தி (40), பதனக்குடி வேலுச்சாமி ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story