விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்


விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
x

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வேலூர் மண்பானை தயாரிப்பாளர்கள் மனு அளித்தனர்.

வேலூர்

வேலூர் சூளைமேடு பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், நாங்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்காக அரசு விதியின்படி மரவள்ளிகிழங்கு மற்றும் பேப்பர் மாவுகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்த சிலைகளை ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித சீர்கேடும் எற்படுவதில்லை.

வேலூர் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டோ பேரிஸ் கொண்டு செய்யப்படும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்கிறார்கள்.

இந்த சிலைகள் தண்ணீரில் கரையாது. மேலும் சுற்றுப்புற சீர்கேடுகளை உண்டாக்கும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் செய்யப்படும் இந்த சிலைகளை பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.

இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டோ பேரிஸ் கொண்டு செய்யப்படும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story