செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்


செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 28 Sept 2023 1:00 AM IST (Updated: 28 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்.

தர்மபுரி

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பானுபூமணி, தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பூமணி ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் தலைமையில் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.தர்மபுரி சுற்றுலா மாளிகை நடந்த இந்த நிகழ்ச்சியின் போது தர்மபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story