திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சேலத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பி வைப்பு


திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சேலத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பி வைப்பு
x

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சேலத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம்

திருப்பதியில் திருமலை வாரி பிரம்மோற்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ வைபவத்தின்போது திருப்பதி திருமலா முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சேலத்தில் இருந்து பூக்கள் அனுப்பி வைப்பதற்காக பூக்களை மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி சேலம் பொன்னுசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாமந்தி, அரளி, துளசி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட வண்ண வண்ண வாசனை பூக்களை நன்கொடையாக கொடுத்து அதனை மாலைகளாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பூக்கள் தொடுக்கப்பட்டது. முடிவில் சுமார் 6 டன் பூக்களை மாலைகளாக தொடுத்து அதனை தனி லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பக்திசாரர் பக்த சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story