பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி


பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 12 Oct 2023 7:23 AM GMT (Updated: 12 Oct 2023 7:26 AM GMT)

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் உடல் நிலையைப் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எச்.ராஜாவுக்கு இன்று காலையில் இருதய சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ரத்த அடைப்புகளை சரி செய்து ஸ்டண்ட் வைக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரை குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.


Next Story