கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி


கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
x

சங்கரய்யாவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், டாக்டர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினார்கள். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வரும் வேளையில் கட்சி தொண்டர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story