இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
x

கோப்புப்படம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதாகும் அவர் இன்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைந்து குணமடைய தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நல்லகண்ணுவுக்கு 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story