'நியாயமான விசாரணை நடக்க செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க கூடாது' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.


நியாயமான விசாரணை நடக்க செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க கூடாது - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
x

குற்றவாளியாக இருக்கக் கூடிய ஒரு நபர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது நியாயமான விசாரணையை பாதிக்கும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் உத்தரவுக்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சரவையில் இருந்து அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கிடையாது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியாயமான விசாரணை நடக்க செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க கூடாது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான பாதுகாப்பை பயன்படுத்தி குற்றவாளியாக இருக்கக் கூடிய ஒரு நபர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது நியாயமான விசாரணையை பாதிக்கும். அந்த அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி இந்த முடிவை எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.



Next Story