செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22-வது முறையாக நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22-வது முறையாக நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2024 12:26 PM GMT (Updated: 21 Feb 2024 7:28 AM GMT)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் செந்தில் பாலாஜி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இன்று காணொலி வாயிலாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்படுவது இது 22-வது முறையாகும்.


Next Story