செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 13 March 2024 11:12 AM GMT (Updated: 13 March 2024 12:14 PM GMT)

செந்தில் பாலாஜிக்கு 26-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வழக்கில் தனது வாதங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 26-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story