சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனி வழி - நெரிசலை தவிர்க்க ஏற்பாடு...!


சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனி வழி - நெரிசலை தவிர்க்க ஏற்பாடு...!
x

சென்னையில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இன்று அதிகளவில் புறப்பட்டு செல்கின்றன.

சென்னை,

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊர் சென்றடையவும், நெரிசலில் சிக்கி தாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும் போலீசாருடன் இணைந்து போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து அரசு பஸ்கள் ஆம்னி பஸ்கள் இன்று அதிகளவில் புறப்பட்டு செல்கின்றன. மேலும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் வெளியூர் செல்கிறார்கள். இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நீண்ட வரிசையில் காத்து நிற்காமல் செல்ல அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் காத்து நிற்காமல் நீண்ட நேரம் கடந்து செல்லும் வகையில் சுங்கச்சாவடியில் உள்ள கடைசி வழி அனுமதிக்கப் பட்டுள்ளது.

மற்ற வழிகளில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் செல்ல அந்த பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் எளிதில் விரைவாக செல்ல முடியும். அங்கு போக்குவரத்தை ஒழுங்கு செய்ய போலீசாருடன் வட்டார போக்கு வரத்து ஆய்வாளர்களும் ஈடுபடுகின்றனர்.

செங்கல்பட்டு, பரனுர், கிழக்கு கடற்கரை சாலை, போரூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட எல்லா சுங்கச்சாவடிகளிலும் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பும் வரை இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story