பாலியல் புகார்: பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாதது ஏன்? - கி.வீரமணி கேள்வி
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம் சுமத்தப்பட்டோரை கைது செய்து சிறையில் அடைப்பது தானே சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் சரியான நீதியாகும்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய மல்யுத்த சம்மேளன அமைப்பின் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் சீண்டல், பாலியல் கொடுமைகள் செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்து தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற வீரர்களின் நியாயமான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பாராமுகத்துடனும் நடந்து கொள்வது வெட்கக்கேடானது.
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம் சுமத்தப்பட்டோரை கைது செய்து சிறையில் அடைப்பது தானே சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் சரியான நீதியாகும்.
மத்திய அரசு பா.ஜ.க. எம்.பி.யை காப்பாற்ற முனைவது ஏன்?. அரசியல் சார்பு இல்லாத மகளிர் உரிமை காக்கும் போராட்டத்தை திசை திருப்பி, ஏதோ காங்கிரஸ் தான் தூண்டிவிட்டு நடத்துகிறது என்ற வடிகட்டிய பொய்யை பா.ஜ.க. அரசு கூறி வருகிறது.
இதற்கெல்லாம், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தவற மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது