பாலியல் புகார்: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது..!


பாலியல் புகார்: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது..!
x
தினத்தந்தி 12 April 2023 10:52 AM IST (Updated: 12 April 2023 11:40 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் புகாரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story