மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனாரான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவியை வாயைப் பொத்தி வீட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story