முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த ஈபிஎஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி


x
தினத்தந்தி 30 Oct 2023 10:19 AM GMT (Updated: 30 Oct 2023 10:39 AM GMT)

பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிர்ப்பு எழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. இன்று தேவர் குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி இன்று முற்பகலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வந்தார். அப்போது, முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வரிசையில் காத்திருந்த சிலர், கடந்த ஆண்டு மரியாதை செலுத்த வராதவர், இப்போது வந்திருப்பது ஏன்? வரும் மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டே பழனிசாமி பசும்பொன் வந்திருக்கிறார் என்று கண்டனக் குரல் எழுப்பினர். சிலர், வி.கே. சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமி என்றும் குரல் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.


Next Story