சாலை விபத்தில் சிறார் மரணங்கள்.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்


சாலை விபத்தில் சிறார் மரணங்கள்.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்
x

5 முதல் 29 வயது வரை உள்ளவர்களின் இறப்பிற்கு சாலை விபத்துகள் தான் முக்கிய காரணம் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சென்னை,

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளால் தினசரி சுமார் 40 சிறுவர்கள் உயிரிழப்பதாக சேவ் லைப் பவுண்டேஷன் கூறியுள்ளது. 5 முதல் 29 வயது வரை உள்ளவர்களின் இறப்பிற்கு சாலை விபத்துகள் தான் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, சாலை விபத்தில் சிறார் மரணங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. தமிழகத்தில் 1,153 சிறார்கள் மரணம் அடைந்துள்ளனர். 2,388 சிறார் மரணங்களுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருந்தது. பஞ்சாப் மாநிலம் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த மாநிலத்தில் 979 சிறார்கள் விபத்தில் இறந்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை இயக்குவதுதான் உயிரிழப்புக்கு முக்கியமான காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டு நடந்த சுமார் 4.23 லட்சம் சாலை விபத்துகளில் 9.6 சதவித விபத்துகள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்துள்ளன என தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story