திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கடைக்காரர் சாவு


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கடைக்காரர் சாவு
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கடைக்காரர் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

மளிகை கடைக்காரர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் லோகையன் (வயது 63). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லோகையன் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூர் அடுத்த தொடுகாடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சாலையின் இடதுபுறம் நின்று கொண்டிருந்தார்.

சாவு

அப்போது திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் மோதியது. இதனால் நிலைத்தடுமாறி

கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லோகையன் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோடு மேற்கு காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவரது மனைவி ரூபினி (28), இவர்களுக்கு ரோஸ்மிகா (2) என்ற மகள் உள்ளார். இவர் தனது நண்பரான ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (35) என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மோட்டார் கைக்கிளில் ஊத்துக்கோட்டையில் இருந்து சூளைமேனிக்கு புறப்பட்டார்.

தொம்பரம்பேடு பகுதியில் வரும்போது அடையாளம் தெரியாக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், தூக்கி விசப்பட்டதில் கார்த்திக் பலியானார். பின்னர் பலத்த காயமடைந்த பிரகாஷை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story