அரசு பள்ளிகளில் 11 ஆயிரம் வகுப்பறைகள் பற்றாக்குறை - வெளியான பகீர் தகவல்..!


அரசு பள்ளிகளில் 11 ஆயிரம் வகுப்பறைகள் பற்றாக்குறை - வெளியான பகீர் தகவல்..!
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லை என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில், பள்ளி கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் வகுப்புகள் திறந்தவெளியிலும், மரங்களின் நிழலிலும் நடத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், அகில இந்திய அளவில் மாநிலம் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றும் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Next Story