தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், கடந்த 25 நாட்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது. மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் சில்லறை விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story