சொத்து தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


சொத்து தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

சொத்து தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரிவாள் வெட்டு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தரணி (வயது 25). தரணியின் குடும்பத்திற்கும் அருகில் உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அய்யப்பன்(20) என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தரணி கோடாலி கிராமத்தில் உள்ள ராசாத்தி என்பவரிடம் கடன் கேட்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தரணியின் தந்தை கொளஞ்சியப்பன்(48) என்பவர், அவரது தம்பி மகனும், தரணியின் குடும்பத்தோடு சொத்து தகராறில் ஈடுபட்டு வருபவருமான அய்யப்பன் குடும்பத்துக்கு ஆதரவாக தரணியை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் இருந்த குச்சியால் தாக்கியதில் தரணி காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறின்போது தரணியின் தாய் உஷாராணியை அய்யப்பன் கல்லால் தாக்கியதாகவும், தரணியின் தம்பி கிரிதரனை(20) அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த தாக்குதல் சம்பவத்தில் அய்யப்பனின் சகோதரி சுமதி(40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி(65), கஸ்தூரி(60) ஆகியோரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தரணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தரணி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story