அரியலூர் பஸ் நிலையம் எதிரே சிறு-குறு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


அரியலூர் பஸ் நிலையம் எதிரே சிறு-குறு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

அரியலூர் பஸ் நிலையம் எதிரே சிறு-குறு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூரில் இருந்து செந்துறை வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செந்துறையில் இருந்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக மருவத்தூர், விழுப்பனங்குறிச்சி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலங்களில் சாலைக்கான எல்லைக் கல்லை நட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில் செந்துறையில் அமைக்கப்படும் புறவழிசாலைக்காக நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றுப்பாதையில் புறவழிச்சாலையை அமைக்க வலியுறுத்தியும் மருவத்தூர் மற்றும் விழுப்பனங்குறிச்சி கிராம சிறு-குறு விவசாயிகள் அரியலூர் பஸ் நிலையம் எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களின் வாழ்வாதாரமே எங்களிடம் இருக்கும் சிறிய அளவிலான நிலங்கள் மட்டுமே. இவற்றையும் சாலை விரிவாக்க பணிக்காக எடுத்துக் கொண்டால் எங்களது வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்படும். எனவே ஏற்கனவே அரசு அறிவித்துள்ளவாறு மாற்று பாதையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story