சிறுதானிய உணவு கண்காட்சி


சிறுதானிய உணவு கண்காட்சி
x

க.பரமத்தி அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.

கரூர்

க.பரமத்தியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் தயாரித்த 272 சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அடுப்பில்லா சமையல் என்ற தலைப்பில் 5 வகையான சிறுதானிய உணவுகள் தயாரிக்கப்பட்டன. இதில், கம்பு, ராகி, சோளம், சாமை உள்ளிட்ட சிறு தானியங்களில் செய்த சைவ பிரியாணி, கேசரி, மிக்சர், முறுக்கு, பொங்கல், ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி, சுண்டல், பாசிப்பயிறு பாயாசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தநிகழ்ச்சியில் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன், வட்டார கல்வி அலுவலர் அசோகன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story