புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் முத்து (வயது 38), அவரது மனைவி ஆனந்தி (32) என்பதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3665 புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் இந்த கடத்தலில் மணலூர்பேட்டையைச் சேர்ந்த தமிழரசன் (29), மணிகண்டன் (44) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து ஆனந்தி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்து, மணிகண்டன், தமிழரசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.