கோர்ட்டு வளாகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு


கோர்ட்டு வளாகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:15:37+05:30)

செங்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் கோர்ட்டும், தீயணைப்பு நிலையமும் அருகருகே அமைந்துள்ளது. நேற்று மதியம் தீயணைப்பு நிலையத்தின் முன்பகுதி மேற்கூரையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. அதை தீயணைப்பு வீரர்கள் பிடிக்க முயன்றனர். அப்ேபாது பாம்பு கீழே விழுந்து கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு நின்றவர்கள் தெறித்து ஓடினர். அதே நேரத்தில் வேகமாக சென்ற பாம்பு மோட்டார் சைக்கிளில் புகுந்தது. அந்த பாம்பை தீயணைப்பு படையினர் போராடி பிடித்து சென்றனர். காதல் திருமண விவகாரத்தில் குருத்திகா செங்கோட்டை கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டு வெளியே வந்த நேரத்தில், கோர்ட்டு வளாகத்தில் புகுந்த பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story