சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


சொக்கநாதன்புத்தூர்  மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவிலில் இரவு குடை சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை ஏ.கே.ஆர். குரூப் உரிமையாளர்கள் காமராஜ், ராஜ் ப்ரியம் மற்றும் குடும்பத்தினர், ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story