தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றமளிகை கடைக்கு சீல்


தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றமளிகை கடைக்கு சீல்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 25 Jan 2023 7:30 PM GMT)

கடைக்கு சீல்

ஈரோடு

அந்தியூர் அருகே ஒலகடத்தில் மளிகை கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.


Next Story