ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம்: தமிழ்நாடு கவர்னர் மாளிகை கவலை


ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம்: தமிழ்நாடு கவர்னர் மாளிகை கவலை
x

ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம் உண்மையில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தமிழ்நாடு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். மற்றொரு ராணுவ வீரர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் திமுகவை கண்டித்து பாஜக இன்று போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவம் உண்மையில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தமிழ்நாடு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கவர்னரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story