வள்ளலாரை பற்றி ஒருவர் உளறிக் கொண்டிருக்கிறார்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு


வள்ளலாரை பற்றி ஒருவர் உளறிக் கொண்டிருக்கிறார்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு
x

வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறிக்கொண்டிருக்கிறார்; அவர் யாரென்று பேச விரும்பவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து இந்த திருமண விழாவில் பேசிய முதல்-அமைச்சர், "வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறிக்கொண்டிருக்கிறார்; அவர் யாரென்று பேச விரும்பவில்லை. இந்திய நாட்டுக்கு ஒர் நல்ல ஆட்சி தேவை. மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளை மற்றும் பாஜகவை எதிர்ப்பவர்களை சிபிஐ, ஐடி, அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் திராவிடமாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்திற்கு சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது" என்று அவர் கூறினார்.

மேலும் மணமக்களிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதன்படி மணமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

1 More update

Next Story