உருவக்கேலியால் வருந்தும் சோனாக்சி


உருவக்கேலியால் வருந்தும் சோனாக்சி
x

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா' படத்தில் நடித்துள்ள சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தன்னை உருவக்கேலி செய்த அனுபவங்களை சோனாக்சி சின்ஹா வருத்தமுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ''சினிமா துறையில் நடிப்பை பற்றி பேசுவதைவிட எனது குண்டான உருவத்தை பற்றிதான் விமர்சிக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அடுத்தவர்களை சந்திக்கும்போது அவர்கள் உடலின் தோற்றம், நிறம், உயரத்தை பார்க்காமல் அவர்களுக்குள் உள்ள திறமைக்கும், நல்ல மனதுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்கும் கனவுகள், லட்சியங்கள் இருக்கும். முடிந்தால் அதை அடைய அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். விமர்சனங்கள் செய்து அவர்களை கீழே தள்ளி விட்டுவிடக்கூடாது. சினிமாவில் ஒல்லியாகவும், அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக என் வயிற்றை காய போடமாட்டேன்.

ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்பதை நான் ஏற்கவே மாட்டேன். பிடித்ததை சாப்பிட்டு அதற்கு ஏற்ற உடற்பயிற்சி செய்கிறேன். யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நாம் இருக்க முயற்சி செய்யாமல் நம் மனதுக்குப் பிடித்தபடி வாழ்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது'' என்றார்.

1 More update

Next Story