தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி நிறைவு


தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி நிறைவு
x

தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி நிறைவு பெற்றது. இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை

துப்பாக்கி சுடும் போட்டி

14-வது தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிப்பட்டியில் மகாராஜா துப்பாக்கி சுடும் மையத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்று கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் பல்வேறு பரிவுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சோ்ந்த ராஜா ராஜகோபால தொண்டைமான், அவரது மகன் பிருத்விராஜ் தொண்டைமான், மகள் ராதா நிரஞ்சனி தொண்டைமான் ஆகியோரும் பதக்கங்களை பெற்றனர்.

பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கமும், தனி நபர் போட்டியில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். விழாவில் ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story