தொடர் விடுமுறையையொட்டி ஒரு வாரத்திற்குசேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்


தொடர் விடுமுறையையொட்டி ஒரு வாரத்திற்குசேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தொடர் விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் ஒரு வாரத்திற்கு இயக்கப்படுகின்றன.

சேலம்

சேலம்

தொடர் விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் ஒரு வாரத்திற்கு இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து தினமும் 1,900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனிடையே சேலம் கோட்டம் சார்பில் வார இறுதிநாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வார இறுதிநாட்கள், மிலாதுநபி, காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் நிலையம், சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

முன்பதிவு செய்யலாம்

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்படுகின்றன.

மேலும் பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், அங்கிருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி மற்றும் கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் செயலி வழியாகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது..

பவுர்ணமி

இதேபோல் வருகிற 29-ந் தேதி பவுணர்மியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

எனவே பயணிகள் அனைவரும் பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story