விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை பெற சிறப்பு முகாம்


விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை பெற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை பெற சிறப்பு முகாம் முதுகுளத்தூரில் இன்று நடக்கிறது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தவணைகள் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைய நேரடி பட்டாதாரராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இருந்து கணவன்-மனைவி இவர்களில் ஒருவர் மட்டுமே பயன்பட முடியும். மேலும் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை வெவ்வேறு காலங்களில் பல்வேறு தகவல் தொழில் நுட்பங்கள் புதுமையில் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 14-வது தவணை பெறுவதற்கு பயனாளிகள் கைரேகையை பயன்படுத்தி, தங்கள் ஆதார் எண்ணுடன் கைபேசி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கட்டாயமாக இணைத்து இருக்க வேண்டும்.

இதுவரை இந்த நடைமுறை மேற்கொள்ளாதவர்களுக்காக இன்று(புதன்கிழமை) முதுகுளத்தூரில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திலும், தேரிருவேலி மற்றும் திருவரங்கம் கிராமத்தில் உள்ள இ-சேவை மையங்களிலும் அதற்கான சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே இதுவரை eKYC செய்யாத பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் ஆதார் விவரங்களை மற்றும் வங்கி கணக்குகளுடன் சேர்த்துக் கொள்ளுமாறு முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story