கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
காசாங்கோட்டை கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் நாட்டு இன மாடுகள், சீமை மாடுகள், வெள்ளாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் காசாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தோர் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றனர். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. மேலும், சிறந்த கிடாரி கன்றுகள் மற்றும் மாடுகள் வளர்த்த 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story