மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி நெல்லை பழையபேட்டை அரசு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வாக்காளர் அட்டை நகல் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story