விராலிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை


விராலிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஆடி கிருத்திகையையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

முருகன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை நாள் அன்று மலை மேல் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் இன்று காலை மலைமேல் உள்ள முருகன் சமேத வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர்.

இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீதி உலா

அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.


Next Story