நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 Jan 2023 7:30 PM GMT (Updated: 17 Jan 2023 7:30 PM GMT)

காணும் பொங்கலையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படும்.

அந்த வகையில் நேற்று காணும் பொங்கலை யொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் நேற்று இரவு வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story