கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்


கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்
x

கோப்புப்படம்

கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரம்-எர்ணாகுளம் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். அதன்படி, எர்ணாகுளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06080) நாளை இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06079) 27-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இதேபோல, தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்டிரலில் இருந்து பித்ரகுண்டாவிற்கு 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை (வண்டி எண்.17238) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story