ஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

சிறப்பு வழிபாடு

தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் வைராக்கிய ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தயிர், திரவிய பொடி, உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓரடியம்புலம்

இதே போல ஓரடியம்புலத்தில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதே கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்ட மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தலைஞாயிறு-வாய்மேடு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர்- பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிக்கல்

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் உள்ள கோலவாமன பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிக்கல் அருகே ஆவராணி கிராமத்தில் அனந்த நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story