கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்

கலியுக வரதராஜ பெருமாள்

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கம்பு, சோளம், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை என்பதால் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கலியுக வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்துசிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

நேர்த்திக்கடன்

பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி பெருமாளை பயபக்தியுடன் வணங்கினர். இதில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story