அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு புனித நீரால் நீராடப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story