4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி - எஸ்.சி.இ.ஆர்.டி. உத்தரவு


4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி - எஸ்.சி.இ.ஆர்.டி. உத்தரவு
x

4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான செயல்திட்டங்கள் அவர் வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அனைத்து வகையான ஆசிரியர்களை முதலில் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வரும் 30, 31 ஆகிய இரண்டு தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், இது குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story