தர்மபுரியில்பெண்களுக்கான விளையாட்டு போட்டி


தர்மபுரியில்பெண்களுக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 2023-03-19T00:31:07+05:30)
தர்மபுரி

சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

பெண்களுக்கு 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டு தல் போன்ற தடகளப் போட்டிகளும், இறகுப்பந்து, கபடி, யோகா, கயிறு இழுத்தல் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுப்பிரிவு பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story